மாயா எப்படியோ அப்படிதான் எனக்கு விஷ்ணுவும் - வீடியோவில் போட்டுடைத்த பூர்ணிமா..!
bigg boss celebrity poornima first vedio published
தமிழில் பிக்பாஸ் சீசன் 7 நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பூர்ணிமா, வீட்டை விட்டு வேளியேறிய பிறகு முதன் முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “பிக்பாஸ் வீட்டில இருந்து வரும் போது ரொம்ப உடல் நிலை சரி இல்லாம தான் வந்தேன். வெளிய வந்து பார்க்கும் போது என்னையும் விஷ்ணுவையும் பத்தி தான் மீம்ஸ் வந்து இருக்கும் என்று நினைச்சேன். ஆனால், என்னையும் மாயாவையும் பற்றி தான் நிறைய மீம்ஸ் இருக்கு. இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல.
பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் ஆரம்பத்தில போகும் போது நான் யாரையும் நண்பர்களாவும், எதிரியாகவும் நினைக்கல . நான் தலைவரானதில இருந்து பிரச்சனை ஆரம்பிச்சிட்டு. அப்போ அந்த நேரத்தில மாயா மட்டும் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. அதில இருந்து தான் நான் மாயாவோட நெருக்கமானேன். எனக்கும் மாயாவுக்கும் கூட சண்டைகள் வந்துருக்கு. எங்க பிரண்ட்ஷிப் சுவீட்டாவே போகல எங்களுக்குள்ளேயும் நிறைய பிரச்சனை வந்துருக்கு .
மாயா எனக்கு எப்பிடி நட்போ அதே போலதான் விஷ்ணுவும். நல்ல கிளோஸ் ஆ சப்போர்ட்டா இருந்தாங்க அப்புறம் விலகிட்டாங்க . ஒரு ஒரு நேரம் ஒரு மாறி கதைப்பாங்க விஷ்ணு. அதனால தான் நாங்க எல்லோரும் பச்சோந்தி என்று நக்கல் அடிச்சோம். அப்புறம் எல்லோரையும் பற்றி படிச்சிட்டேன். யாரும் உண்மை இல்லை. எல்லோரும் கேம் தான் என்று புரிஞ்சிட்டேன். அதனாலேயே எனக்கு கொஞ்ச நாளா பிக்பாஸ் வீட்டில இருக்க பிடிக்காம போனது.
நிறைய பேர் என்னட்ட கேக்கிற விஷயம் ஏன் பணப்பெட்டி எடுத்தீங்க? என்று. எனக்கு உண்மையிலேயே வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. பணம் எடுத்தா எனக்கு பிரயோஜனம் என்று தான் எடுத்தேன். வேறு ஒரு காரணமும் இல்லை. அதே மாதிரி நிறைய பேர் பிரதீப் விஷயம் கேட்டு இருந்திங்க. நான் அதை பற்றி அடுத்த வீடியோல கதைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bigg boss celebrity poornima first vedio published