2025 ஜனவரி 01 அன்று புறப்பட்டு, 2024 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பயணம் செய்து, டைம் ட்ராவல் செய்த விமானம்..! - Seithipunal
Seithipunal


​2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால்  குறித்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும். 

உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.

இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 05 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30)30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30). கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

இதனை தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A time traveling plane took off on January 1 2025 and traveled to December 31 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->