பிக் பாஸில் திடீரென நடந்த எலிமினேஷன்! வெளியேறியது யார்?
Bigg Boss elimination update
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ். கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன் உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து 2 பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மிக்ஜம் புயல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்காததால் சென்ற வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக மீட் வீக் எவிக்சன் நடைபெற்றுள்ளது . அதாவது, வைல்டு கார்டில் இரண்டாவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Bigg Boss elimination update