#பிக்பாஸ்6 : இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார் தெரியுமா.? குஷியில் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. எப்போது 6 வது சீசன் ஆரம்பிக்கும் என்று காத்திருந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலில் நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபர் ஆக இருந்த ஜி பி முத்து தானாகவே வெளியேறினார். 

தனது குடும்பத்தை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறிவிட்டு அவர் வெளியேறினார். மேலும், முதல் வார எவிக்ஷனில் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஆயிஷா உள்ளிட்டோர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். 

சமீபத்தில் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கிடையில் அரசியல் குறித்த பேச்சு வார்த்தையும் கொந்தளிப்பும் ஏற்பட்டு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், இன்று வார இறுதி என்பதால் நிகழ்ச்சியில் கமல் வந்து போட்டியாளர்களுடன் பேசிய நிலையில் பிக்பாஸில் இந்த வார எவிக்‌ஷனில் அசல் கோளார் வெளியேற்றப்பட்டுள்ளார். அசல் கோலார் பெண் போட்டியாளர்களிடம் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது நெட்டிசன்களுக்கு நிம்மதி கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss season 6 asal Kolar out


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->