கோடைகாலங்களில் மறந்தும் கூட இதை எல்லாம் சாப்பிடாதீங்க..!
Dont eat all these in the summer
உலகில் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நமது வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அதேபோன்று மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். இந்த நவீன உலகில் அதை நாம் பொருட்படுத்தாது அலட்சியமாக உள்ளதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றோம்.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் உணவில் கட்டுப்பாடாக இருப்பது உடல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். அதாவது கோடை காலத்தில் காரமான உணவுகள் சாப்பிட்டால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.
![](https://img.seithipunal.com/media/spycy-gf62r.jpg)
காரமான உணவு வகைகள் நமது உடல்சூட்டை அதிகப்படுத்தும்.அதை தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக, நண்டு, சிக்கன், இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள சூடு காரணமாக உடல்சூடு அதிகரிக்க கூடும்.
புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளை தவிர்ப்பது மிக நல்லது. பொதுவாக புளி அதிகம் சாப்பிடுவது உடல்சூட்டையும், பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.அத்துடன், இது ஆசனவாயில் எரிச்சலை ஏற்படுத்தும்.
![](https://img.seithipunal.com/media/spy-jgrdg.jpg)
எண்ணெயில் பொரித்த உணவுகள், பலகாரங்கள், தேநீர் போன்றவை வெயில் காலத்தில் பித்தத்தை ஏற்படுத்தும். அத்தனையும் முடிந்தளவில் தவிர்ப்பது நல்லது.
பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட் புட் வகைகள், அதிக செறிவூட்ட பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
English Summary
Dont eat all these in the summer