பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட்.!! சமூக வலைதளத்தில் வைரல்.!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட்.!! சமூக வலைதளத்தில் வைரல்.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரைக்கும் ஆறு சீசன்களை கடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது 7 சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். 

இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும்,  ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும், மற்றொரு வீட்டில் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்களில் சிலரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, நடிகர் அப்பாஸ், தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ஸ்ரீதர் மாஸ்டர், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் பொது மக்களில் இருந்து கோவையில் இருந்து முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா போட்டியாளராக பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகார பூர்வ தகவல் இந்தப் போட்டியின் தொடக்க விழாவின் போது  வெளியாகும். மேலும், இந்த சீசன் 7 அக்டோபர் 8 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss season 7 participants list viral social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->