இன்று ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - ஆளுநரைக் கண்டித்து திமுக போராட்டம்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்றுக் கூடியது. கூட்டம் தொடங்கியவுடன் முதலில் ஆளுநர் உரையை வசிப்பது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்தார். அங்கு முதலில் தேசிய கீதம் போடுமாறு கூறினார். ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடப்பட்டது. 

இந்தப் பாடல் முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில், சட்டசபைக் கூட்டத்தில் தமிழ் நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் அவமானப்படுத்தியதாக ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளதாவது:- தமிழ் நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் "மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும்." ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு" என்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்," என்றுத் 
தெரிவித்திருந்தார். அதன் படி இன்று மாவட்டத்து தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today dmk party protest in tamilnadu against governor rn ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->