கர்நாடகாவில் பெரும் சோகம்! 6 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சாம்ராஜ்நகர் மாவட்டம் பதனகுப்பே கிராமத்தைச் சேர்ந்த லிங்கராஜு மற்றும் ஸ்ருதி தம்பதிகளின் ஒரே குழந்தையான தேஜஸ்வினி (6), செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை, வழக்கம் போல பள்ளிக்கு சென்ற தேஜஸ்வினி, வகுப்பின்போது விட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க வெளியில் வந்தார். அதே சமயத்தில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

உடனே ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அவளை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாரடைப்பால் தேஜஸ்வினி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 6 வயது சிறுமிக்கு மாரடைப்பு ஏற்படுவதால் பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகள் இதுகுறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வு சிறுவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான முக்கியத்துவத்தை மீண்டும் முன்வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big tragedy in Karnataka A 6yearold student died of a heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->