இந்தோனேசியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் அறிமுகம் - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா அரசு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை சமாளிக்க புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று சாதாரண முறையில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சாதம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிக்கன் ஆகிய ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியிலொன்றாக இருந்தது.

திட்டத்தின் தொடக்க நாளிலேயே 190 சமையலறைகளில் சுமார் 20 பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. முதல் நாளிலேயே 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

முழுமையாக செயல்படும்போது, இந்த திட்டத்தின் மூலம் 2029-ஆம் ஆண்டுக்குள் 82.9 மில்லியன் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்துக்குள் பயனாளர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம், அந்த நாட்டின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதோடு சமூகத்தின் மறுக்கப்பட்டப் பிரிவுகளுக்கு தேவையான ஆதரவை வழங்கும் என்று நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia launches free lunch program for pregnant women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->