#பிக்பாஸ்_6: வெளியான தகவலால், ரசிகர்களை ஏமாற்றம்.?!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. நகரம் முதல் கிராமம் வரை, முதியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ்.

இதில் திரை துறையை சேர்ந்த பிரபலங்களை ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்கவைத்து அவர்களுக்குள் ஏற்படும் அன்பு, காதல், கோபம் அனைத்தையும் படம்பிடித்து காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவார்கள்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து, தற்பொழுது 6 வது சீசனை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி 6- வது சீசன் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். 

தற்போது இதுகுறித்து சமீபத்தில் புரோமோ வீடியோக்கள் வெளியாக துவங்கியுள்ளன. இதில் பொதுமக்களே கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிக்பாஸ் 6 வரும் அக்டொபர் 2 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக அக்டொபர் 9 ஆம் தேதிக்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss 6 postponed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->