பிக்பாஸ் ஜூலி மற்றும் ஓவியா மீண்டும் கட்டித்தழுவி பாசப்பரிமாற்றம்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

எத்தனை சீசன்கள் வந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனின் போனதே இல்லை என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் கருத்து. காரணம் அந்த அளவிற்கு சுவாரசியமாகவும் சண்டைகள் நிறைந்ததாகவும் பிக்பாஸில் கலந்துகொண்டு ஓவியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

அதில் அவர் மிகவும் நேர்மையாக விளையாடினார் என்பது பலரின் கருத்து. அதுபோல ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றார். சமீபத்தில் கூட காதல் பிரேக் அப் போலீஸ் புகாரில் என்று சர்ச்சைகளில் சிக்கினார். ஓவியா அதிகம் வெறுக்கும் நபராக பிக் பாஸ் ஜூலி இருந்தார். 

இவர்கள் இருவரும் சண்டை போடும் எபிசோடுகள் அனைவராலும் மறக்க முடியாதவை. இத்தகைய நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டு அப்போது தங்களது அன்பை கட்டித்தழுவி பரிமாறிக் கொள்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து கொண்டதே நெகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss oviya and Julie meets at behindwood channel Program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->