அரசு பள்ளிகளில் திரைப்படம் கட்டாயம் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
movie screened in govt schools
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் படி, தற்போது அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாழும் சூழலை உணர்த்தும் விதமாக, மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கல்விசார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திரைப்படங்கள் மாணவர்கள் பல்வேறு வகையான கலாச்சார தனித்தன்மையை அறிந்து கொள்ளவும், வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளவும், பாலின சமத்துவத்தை அறிந்து கொள்ளவும், நட்பு பாராட்டவும், குழுவாக இணைந்து செயல்படவும் வழி வகுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், திரைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு கதை எழுதுதல், பாடல் எழுதுதல், நடிப்பு, தயாரிப்பு, கேமரா, எடிட்டிங் உள்ளிட்ட திறமைகளை வளர்ப்பதற்காக கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக சில விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது:-
* திரையிடப்போகும் கல்விசார் திரைப்படங்களை, முன்கூட்டிய மாதத்தின் முதல் வாரத்தில் EMIS தளத்தில் இருந்து தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். எமிஸ் தளத்தில் இருந்து மட்டுமே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து திரையில் திரையிட வேண்டும்.
* திரைப்படங்களை திரையிடுவதற்கு என்று ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் திரைப்படங்களை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, DVD அல்லது பென்டிரைவ் மூலம் சேமிப்பு வைத்து, Hi-Tech Lab/TV/Projector/Smart Board மூலம் மாணவர்களுக்கு திரைப்படங்களை காட்ட வேண்டும்.
* மாணவர்களுக்கு திரையிடப்படும் முன்னரே, தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் அந்த திரைப்படத்தை பார்த்து, படத்தின் தலைப்பை பள்ளி வளாகத்தின் சுவரொட்டியில் ஒட்டி வைக்க வேண்டும். மேலும், திரைப்படங்களை பற்றி எடுத்துரைக்க, ஆர்வமுள்ள துறைசார் வல்லுநரை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்ற செய்யலாம்.
English Summary
movie screened in govt schools