விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்ததா?
bismi talks about vidaamuyarchi
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
அந்தப் படம் ''பிரேக் டவுன்'' என்ற படத்தின் காப்பி என்றும்; அந்தப் படக்குழு லைகா நிறுவனத்திடம் நூறு கோடி ரூபாய்வரை நஷ்ட ஈடு கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியிருக்கிறார். அதில்,அவர் கூறியதாவது; "பிரேக் டவுன்'' படத்துக்கான ரைட்ஸை விடாமுயற்சி படக்குழு வாங்கவில்லை.
அதன் காரணமாக நூறு கோடி ரூபாயை அவர்கள் நஷ்ட ஈடாக கேட்டார்கள். ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 கோடி ரூபாயை லைகா நிறுவனம் வழங்கியிருக்கிறது. இதனால் விடாமுயற்சிக்கு இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது என்று பிஸ்மி கூறியுள்ளார்.
English Summary
bismi talks about vidaamuyarchi