சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..2 பேர் கைது..வெளியான பரபரப்பு தகவல்!
Chennai lawyer murder case takes a dramatic turn Two people have been arrested Sensational information out
சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில்அவரது ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோரை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்து வந்தவர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்.வக்கீலானா இவர் ,விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். இந்தநிலையில் இன்று பூட்டி கிடந்த வீட்டில் வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் அவரது ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோரை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிகிறது . அவர் தனது நண்பரான சேதுபதி கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது . இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
English Summary
Chennai lawyer murder case takes a dramatic turn Two people have been arrested Sensational information out