அட்லீயை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!! - Seithipunal
Seithipunal


அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். 

தற்போது இவர் அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்தை தொடர்புபடுத்தி வீடியோ மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அட்லீ ரசிகர்கள் இவரை வருத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி , தீபிகா படூகோன் உள்ளிட்டோர் நடிப்பில் அட்லீ இயக்கீயிருக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து ரெடியா என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் இயக்குநர் அட்லீ. இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன், உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணைத்து அந்த போஸ்டரை பகிர்ந்தார்.

அதில் ஒரு காமெடி காட்சியில் கவுண்டமணி சினிமா வாய்ப்பு கேட்டு போன இடத்தில் பேசும் வசனம் “ கத நல்லா கதையா” என்ற கவுண்டமணி கேட்பதும், அதற்கு செந்தில் ‘ இதெல்லாம் உங்களுக்கு அவசியமா’ என்று பதிலளிப்பதும் இடம்பெற்றுள்ளது. காட்சிகள் அடங்கிய மீம் வீடியோவை பகிர்ந்துள்ளார் மாறன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blue shirt maran targeting atlee in twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->