''ப்ளூ ஸ்டார்'' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி.!  - Seithipunal
Seithipunal


எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ப்ளூ ஸ்டார்''. இந்த திரைப்படத்தை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தயாரான இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை அடுத்து கீர்த்தி பாண்டியன்-அசோக் செல்வனின் திருமணத்தை முன்னிட்டு ''ரயிலின் ஒலிகள்'' என்ற பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. 

இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ''அரக்கோணம் ஸ்டைல்'' என்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமத்தை சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue Star Movie Release Date


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->