கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த "கந்தாட குடி" ட்ரைலர் வெளியீடு - பிரதமர் மோடி வாழ்த்து..!
canada actor punitha rajkumar in kanthada kudi trailar release
கன்னட சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளம் வந்த புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். அவர் நடிப்பில் உருவாகிய 'கந்தாட குடி' திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டிரைய்லரை பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரில் சென்று நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து கொள்ள விரும்பினார் என்று புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து நடிகர் புனித் ராஜ்குமார் இருக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, "கந்தாட குடி" திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை மற்றும் ஆற்றல் நிறைந்தவர். அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். "காந்தடா குடி" என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
canada actor punitha rajkumar in kanthada kudi trailar release