வெளியானது கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது பாடல்.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிபில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்தத் திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதையடுத்து இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, "உன் ஒளியிலே" என்ற பாடல்  இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain millar movie second song released


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->