விஜய் பரந்தூருக்கு பறந்து போனாரா? மறந்து போனாரா? - வெளுத்து வாங்கிய தமிழிசை.! - Seithipunal
Seithipunal


நேற்று தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ”மக்கள் 910 நாட்கள் விமான நிலையம் அமைய வேண்டாம் என போராடி வருகின்றனர். 

910-வது நாள் விஜய் போகிறார். விஜய் பரந்தூருக்கு பறந்து போனாரா? அல்லது மறந்து போனாரா? இதுவரை மறந்து போன அவர் திடீரென பரந்தூருக்கு பறந்து சென்றார் என்றால் என்ன அர்த்தம்..? சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் பரந்தூர் மக்களின் சத்தம் அவருக்கு கேட்கவில்லையா? சினிமா முடிந்த பிறகு இப்போது மக்கள் சத்தம் கேட்கிறதா? இது மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடம். 

உண்மையில் நாங்கள் விவசாயிகளை எதிர்த்து செயல்படவில்லை. நாங்களும் அவர்களுக்கு ஆதரவு தான். இதே விஜய் விவசாயிக்கு கொடுக்கும் சலுகைகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும். அவர்கள் மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று போராடினால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளலாம். 

இவ்வளவு வருஷம் இடத்தை மாற்றுங்கள் என்று சொன்னால் என்ன செய்வது? ஏன் முதல் நாளில் இதனை சொல்லவில்லை? அந்த இடத்தில் வேண்டாம் என்றால் நீங்கள் ஒரு நல்ல இடம் சொல்லுங்கள். இவ்வளவு ஆண்டுகள் இது பற்றி பேசாமல் திடீரென பரந்தூருக்கு அவர் பறந்து வந்தால் அது பொது நலமா? அல்லது சுயநலமா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai soundarrajan speech about tvk leader vijay going to paranthur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->