மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
IIT Chennai Kamakodi tamilisai selvaperunthagai
பசுவின் சிறுநீர் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சை ஆன போதும், தனது கூற்று உண்மை என்று மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
அதில் குறிப்பாக, அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவிக்கையில், "மாட்டின் சிறுநீருக்கு அமிர்த நீர் என்று பெயர். அப்படி என்றால் உயிருக்கான நீர் என்று பொருள். மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் மாட்டின் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், தமிழிசை கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
IIT Chennai Kamakodi tamilisai selvaperunthagai