எல்லைத் தாண்டி செல்ல வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் பி 475, பி 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அந்நாட்டு அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பும் விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish department warning to tn fishermans for go to sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->