கல்லூரிகள் தரம் குறைவு என விமர்சனம்..ஜெய்ராம் ரமேசுக்கு தமிழிசை பதிலடி!  - Seithipunal
Seithipunal


மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைவு என்று விமர்சனம் செய்த  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.மேலும் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் உச்ச பட்ச அமைப்பான என்.எம்.சி. தேசிய மருத்துவ மேலாண்மை கவுன்சில் அனுப்பியுள்ள முன்னெச்சரிக்கை தற்காலிக சுற்றறிக்கையில் கூறியிருப்பதைமுன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார் :-

அதில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்சமயம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 105 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும்  ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டிருந்த மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள .முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை.

இந்தியா முழுவதும் ஒரே ஒரு எய்ம்ஸ் இருந்த நிலை மாறி பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
 என  ஜெய்ராம் ரமேஷ்க்கு பதிலளித்துள்ள தமிழிசை இதையெல்லாம் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Criticism of poor quality of colleges Tamilisai responds to Jairam Ramesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->