100 ஆண்டுகளை கடந்த அரசு பள்ளிகள் - திருவிழாவாக கொண்டாட கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நூறு ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்களை எடுத்து, அந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவாக கொண்டாட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றன.

இந்த பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் வாயிலாக நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நூற்றாண்டு சுடர் ஏற்றி திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 37 அரசு பள்ளிகளிலும் நூற்றாண்டு சுடர் ஏற்றப்பட்டு, நூற்றாண்டு திருவிழா நாளை முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இது மாவட்ட அளவிலான தொடக்க விழா கொண்டாட்டம் ஆகும். இதையடுத்து 100 ஆண்டுகளை கடந்த பள்ளிகள் பள்ளி அளவில் நூற்றாண்டு திருவிழாவை பள்ளியின் ஆண்டுவிழாவோடு முன்னாள் மாணவர்கள், பெற்றோரை இணைத்து கொண்டாடவும் கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வகுத்துள்ளது. இதேபோல், சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றாண்டு திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக முன்னாள் மாணவர்கள் பலர் அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக கொண்டாடும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department order celebrate festival govt schools crossed 100 years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->