அரியானாவில் அதிர்ச்சி சம்பவம் - 7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடியைத் திருடிய கொள்ளை கும்பல்.! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் வீட்டில் புகுந்து பெண்களின் தலைமுடிகளைக் கொள்ளையடித்துச் சென்ற வினோத சம்பவம் நடைபெத்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் ரஞ்சித் மண்டல் என்பவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டில் அதிகளவில் பெண்களின் தலை முடியை மூலப்பொருளாக வாங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை மண்டல் வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 

இதையடுத்து வெளியில் சென்றிருந்த ரஞ்சித் மண்டல் வீடு திரும்பிய போது தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பக்கத்து அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில், கொள்ளையர்களின் கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மண்டல் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang robbery womens hair in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->