மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கேப்டன் விஜயகாந்த் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். மேலும் இவர் தனது ரசிகர்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain vijaykanth latest photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->