டப்பிங் பெண் கலைஞரை ஆபாசமாக பேசி தாக்குதல்.! நடிகர் ராதா ரவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


டப்பிங் பெண் கலைஞரை ஆபாசமாக பேசி தாக்குதல்.! நடிகர் ராதா ரவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு.!

தமிழ் சினிமா, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக, சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆர்.சங்கீதா என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்தாண்டு, சங்கத்தின் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். 

அப்போது, சங்கத்தின் குறைகள் குறித்து அதன் உறுப்பினர்களில் ஒருவராக தான் கேள்வி எழுப்பியதை அடுத்து, தன்னை ஆபாசமாக பேசியதாகவும், தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக சங்கீதா புகார் அளித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவி இரண்டாவது நபராக சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் சங்கத்தின் செயலாளர் கதிரவன், கவிதா, கிரிஜா உள்பட மொத்தம் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அந்த புகார் தொடர்பாக நேற்று, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் சினி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on actor radha ravi for attack dubbing artist


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->