இந்தியன் 2 -விற்கு 'ஆஸ்கர்' உறுதி - சொன்ன பிரபலம் யாரென்று தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "இந்தியன் 2" திரைப்படம் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியுள்ளது. 

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளாள் இந்த படத்தில் கமலஹாசன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் எஸ். ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், கமலஹாசனின் தீவிர நடிகருமான ரோபோ ஷங்கர் படம் பார்க்கப் போவதற்கு முன்பே செய்தியர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், "இந்தியன் 2 படம் வெற்றி பெறுவதற்காக கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்துள்ளதோடு, பூசணிக்காய் வாங்கி உடைத்துள்ளேன். 

இந்த படம் கட்டாயம் மாபெரும் வெற்றி பெறும் என்று அனைவருக்குமே தெரியும். இந்த படத்திற்காக உலகநாயகனுக்கு 5வது தேசிய விருது கிடைக்கும். அதேபோல் வசூலும் 1500 கோடிகளை எட்டும். ஆஸ்கர் விருதும் நிச்சயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும் இந்த படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க நான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செல்லவுள்ளேன். அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று தியேட்டருக்குள் ரசிகர்களுடன் சேர்ந்து வெடி வைத்துக் கொண்டாடுவேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Celebrity Expects Oscar For Indian 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->