இருமனம் இணையும் திருமணம்.. 2021-ல் களைகட்டிய பிரபலங்களின் திருமண வைபவங்கள்.! - Seithipunal
Seithipunal


2021ஆம் ஆண்டில் காதலை வென்று திருமணத்தில் இணைந்த பிரபலங்கள்: 

திருமணத்தில் இணைந்த பாலிவுட் நடிகர், நடிகைகள் :

வருண் தவான் - நடாஷா தலால் :

பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் ஜனவரி மாதம் 24ஆம் தேதி தனது பள்ளி தோழியான நடாஷா தலாலாவை திருமணம் செய்து கொண்டார்.

யாமி கவுதம் - ஆதித்யா தார் :

விக்கி டோனார் படம் மூலம் பிரபலமான யாமி கவுதம் தான் நடித்த யூரி படத்தின் இயக்குநரான ஆதித்யா தாரை ஜூன் மாதம் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா :

பிரபல பாலிவுட் நடிகரான ராஜ்குமார் ராவ், நடிகை பத்ரலேகாவை நவம்பர் மாதம் 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் :

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலை டிசம்பர் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் இணைந்த கோலிவுட் நடிகர், நடிகைகள் :

ஆனந்தி - சாக்ரடீஸ் :

நடிகை 'கயல்" ஆனந்தி, இணை இயக்குனரான சாக்ரடீஸை ஜனவரி மாதம் 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா :

நடிகர் விஷ்ணு விஷால் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

பிரணிதா சுபாஷ் - நிதின் ராஜு :

நடிகை பிரணிதா சுபாஷ், பெங்கள+ரை சேர்ந்த தொழிலதிபரான நிதின் ராஜுவை மே மாதம் 30ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சினேகன் - கன்னிகா ரவி :

பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் ஜுலை 29ஆம் தேதி கமலஹாசன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

வித்யுலேகா ராமன் - சஞ்சய் :

பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் என்பவரை செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லிஜோமோல் ஜோஸ் - அருண் ஆண்டனி :

ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோமோல் ஜோஸ்-க்கும், அருண் ஆண்டனி என்பவருக்கும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடந்தது.

கார்த்திகேயா - லோஹிதா ரெட்டி :

வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கும், நீண்ட நாள் காதலியான லோஹிதா ரெட்டிக்கும் நவம்பர் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

கார்த்திக் குமார் - அம்ருதா சீனிவாசன் :

நடிகர் கார்த்திக் குமாருக்கும், மேயாத மான் உள்பட சில படங்களில் நடித்திருந்த அம்ருதா சீனிவாசனுக்கும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் நடந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Celebrity marriage at 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->