சந்திரமுகி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் வரலாற்று வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

இதனையடுத்து சந்திரமுகி 2 திரைப்படம் எடுப்பதற்கு இந்த படத்தின் இயக்குனர் பி.வாசு முடிவு செய்தார். அதன்படி, சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கீரவாணி இசையமைத்துள்ளார்.


இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandramukhi 2 Kangana Ranaut character poster tomorrow release


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->