TNBudget2025 | தமிழகத்தில் புதிய கலைக்கல்லூரிகள் & ஐ.டி.ஐ.க்கள் எங்கெங்கே? முழு விவரம் இதோ!
TN Budget 2025 new college announce
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: புதிய கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு
உயர்கல்வி வளர்ச்சி – புதிய கலைக்கல்லூரிகள்
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற கல்வித் திட்டங்களால் உயர் கல்விச் சேர்க்கை அதிகரிக்கப் பெற்றுள்ளது. இதை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு புதிய அரசுக் கலைக்கல்லூரிகளை கீழ்க்கண்ட இடங்களில் தொடங்கவுள்ளது:
- குன்னூர் (நீலகிரி)
- நத்தம் (திண்டுக்கல்)
- ஆலந்தூர் (சென்னை)
- விக்கிரவாண்டி (விழுப்புரம்)
- செய்யூர் (செங்கல்பட்டு)
- மானாமதுரை (சிவகங்கை)
- முத்துப்பேட்டை (திருவாரூர்)
- திருவிடைமருதூர் (தஞ்சை)
- பெரம்பலூர் நகர் (பெரம்பலூர்)
- ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி)
தொழிற்கல்வி மேம்பாடு – புதிய ஐடிஐ பயிற்சி நிலையங்கள்
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியுதவியுடன் புதிய ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும். விடுதி வசதியுடன் தொடங்கப்படும் இந்த நிறுவனங்கள் கீழ்க்கண்ட இடங்களில் செயல்படும்:
- கிருஷ்ணகிரி
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- மதுரை (திருப்பரங்குன்றம்)
- திருச்சி (மண்ணச்சநல்லூர்)
- கோவை (பேரூர்)
- தருமபுரி (காரிமங்கலம்)
ஒவ்வொரு நிலையத்திலும் ஆறு தொழிற்துறைகள் செயல்படும். ஆண்டுக்கு 1,370 மாணவர்கள் பயிற்சி பெறக்கூடிய இந்த நிலையங்கள் தொழிற்கல்வியை மேலும் வளர்க்கும் என அரசு தெரிவித்துள்ளது.
English Summary
TN Budget 2025 new college announce