போதும்! போதும்!திமுக அரசுக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை...! - வானதி சீனிவாசன்
The DMK government is not qualified to present the budget Vanathi Srinivasan
நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளான இன்று பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,"டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இதில் ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.தி.மு.க அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ஸ்டாலின், ரூபாய் இலட்சினை மாற்றி இருப்பதன் மூலம் அவர் பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு பாஜக உட்ப மற்ற உறுப்பினர்கள் துணை நிற்பதாக தெரிகிறது.
English Summary
The DMK government is not qualified to present the budget Vanathi Srinivasan