அடுத்த இன்ஸ்டாகிராம் பயங்கரம்!!! இந்தியா வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!!
england woman who came to india has got harassment by indian instagram friend
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்,கைலாஷ் என்ற இந்தியாருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்துப் பெண், மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.
இதில் தனது இன்ஸ்டா நண்பன் கைலாஷையும் தன்னுடன் அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் கைலாஷ் தான் டெல்லியில் உள்ளதாகவும், அங்கு வருமாறும் பெண்ணனிடம் தெரிவித்துள்ளார்.இதை ஏற்று அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் மாலையில் தனது அறைக்கு கைலாஷை அப்பெண் அழைத்துள்ளார்.அங்கு தனது நண்பன் வாசிம் உடன் வந்த கைலாஷ் ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அவர்களிடமிருந்து தப்பிக்க ஹோட்டல் லிப்டில் சென்றபோது அங்கு வேலைபார்த்த ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் 'வசந்த் குஞ்ச்' காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த விசாரணையில் கைலாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. இதில் அவனையும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு தொடர்புடையவர்களையும் கைது செய்த போலீசார் மேற்கட்ட விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில்,தன்னைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு பெண்ணை அடிக்கடி கைலாஷ் வற்புறுத்தியது தெரியவந்தது.இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
English Summary
england woman who came to india has got harassment by indian instagram friend