இறைவன் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் - நடிகர் ஜெயம் ரவி ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


இறைவன் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் - நடிகர் ஜெயம் ரவி ஓபன் டாக்.!

அகமது இயக்கத்தில் நடிகர்கள் நயன்தாரா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’இறைவன்’. வருகிற 28ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுவரைக்கும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல்முறையாக இந்தப் படத்திற்குதான் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி பேட்டியளித்ததில், “நான் பொதுவாக அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் தான் படம் நடிப்பேன். ஆனால், ‘இறைவன்’ படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என்று தான் சொல்வேன். 

ஏனென்றால், இது ‘ஏ’ சர்டிஃபிகேட் திரைப்படம். படத்தைப் பார்த்து அவர்கள் பயப்பட வாய்ப்பு உண்டு. அதனால் தான் நாங்கள் தெளிவாக எதையும் மறைக்காமல் டிரெய்லரிலேயே விஷயத்தைத் தெரியப்படுத்தி உள்ளோம்.

இது போன்ற ஜானர் படங்களை விரும்பும் பார்வையாளர்களும் இங்கு உண்டு. அவர்கள் நிச்சயம் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள். ஃபேமிலி ஆடியன்ஸூக்கு நான் அடுத்தடுத்து நிறைய படங்கள் வைத்துள்ளேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

childrens dont see iraivan movie actor jeyam ravi speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->