தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்!
comedian Actress dead
பிரபல நகைச்சுவை நடிகையும் கதாபாத்திர நடிகையுமான பிந்து கோஷ், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துப் புகழ் பெற்றவர். நகைச்சுவை பாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
சினிமாவில் அவரது பயணம் *களத்தூர் கண்ணம்மா* திரைப்படத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது வசீகரமான நடிப்பும் அழகிய குணச்சித்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
76 வயதாகிய பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திரைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த அவரின் மறைவுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.