வீடு திரும்பினார் இசைப்புயல் - அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு.!
isaipuyal ar rahman discharge from apollo hospital
தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.
இந்தத் தகவலால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன் .
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை நீரிழப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் வழக்கமான பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
isaipuyal ar rahman discharge from apollo hospital