திடீர் தீ!!! 500 வருட பழமையான புளியமரம் கொழுந்து விட்டு எரிந்தது...!
A 500 year old tamarind tree caught Sudden fire
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்றுள்ளது. அந்த இடத்தில் பழமையான மரங்கள் அதிகம் உள்ளன.
இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க சிலர் முயற்சி செய்தனர்.

அனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் சம்பவம் குறித்து தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? எனப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிணங்க பலரையும் விசாரித்தனர்.அதில் தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A 500 year old tamarind tree caught Sudden fire