அரசியல் கட்சி தொடங்கும் தமிழ் திரைப்பிரபலம்! கொடியும் ரெடி! - Seithipunal
Seithipunal


விரைவில் சிஎஸ்கே என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது உறுதி என்று, நடிகரும், பிரபல youtube மன்னனுமான கூல் சுரேஷ் பேட்டி அளித்துள்ளார். 

அவரின் அந்த பேட்டியில், "இந்த மக்களவைத் தேர்தலில் நான் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ததை பார்த்து என்னை அறிந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். மேலும் என்னை பாஜக ஆதரவாளர் என்றும், சங்கி என்றும் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். 

ஆனால், பாஜக மட்டுமல்ல வேறு கட்சிகள் என்னை பிரச்சாரம் செய்ய அழைத்து இருந்தாலும், அவர்களுக்கும் நான் பிரச்சாரம் செய்திருப்பேன் என்பது தான் உண்மை. நான் பாஜகவின் ஆதரவாளர் கிடையாது. அவர்கள் என்னை மதித்து பிரச்சாரத்திற்கு கூட்டதால் நான் பிரச்சாரம் செய்து செய்தேன். 

மேலும் நான் எந்த வேட்பாளருக்கு வாக்கு கேட்க வருகிறானோ அவர் வெற்றி பெறுவார் என்று பாஜகவினருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் என்னை பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளார்கள். நானும் அவர்களின் விருப்பப்படி மகிழ்ச்சியுடன் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு நீங்கள் அந்த கட்சிக்கு சென்று விட்டீர்களா என்று என்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி கேட்டால் நான் என்ன செய்வது. 

நான் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தேன். இதனால் என்னை கட்சி ஆரம்பிக்க போகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஆம், நான் கட்சி ஆரம்பிக்க போவது உறுதி தான். நான் ஏதோ இன்று நேற்று உதவி செய்பவன் அல்ல. கடந்த 2000 ஆண்டு முதல் உதவி செய்து வருகிறேன். 300க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்களை நடத்திய உள்ளேன்.

சிஎஸ்கே கட்சி ஒருவது வருவது உறுதி. அடுத்த வாரம் டெல்லிக்கு செல்கிறேன். குறைந்தபட்சம் 100 வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும். சிஎஸ்கே கட்சிக்கான கொடியையும் தயார் செய்து விட்டேன். இது குறித்து இன்னொரு சந்திப்பில் முழுமையாக நான் அறிவிப்பேன்" என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cool Suresh political party CSK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->