பட்டாசு ஆலை விபத்து - இயக்குனர் மாரி செல்வராஜ் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் மாறி செல்வராஜ், பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் இயக்கி வெளிவந்துள்ள வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

இதற்கிடைய தூத்துக்குடி மாவட்டம், குறிப்பன்குளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம்  ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் வெடி விபத்தில் உயிரிழந்த, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

மேலும், முத்துக்கண்ணன் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அவர், தொடர்ந்து விபத்தில் பலியான மற்ற மூவரின் வீடுகளுக்கும் சென்று 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cracker factory accident director mari selvaraj resilience incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->