பொன்னியின் செல்வன் படத்தைக் காண முடியாமல் தவிக்கும் அஷ்வின்..! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் டி20 தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். முதல் ஆட்டத்தில் ஆடிய அஸ்வின், அருமையாகப் பந்துவீசி உள்ளார். டி20 தொடரின் 2-வது ஆட்டம் வரும் ஞாயிறன்று குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது. 

இதற்கிடையே, மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகராகிய அஸ்வின் அந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளார்.

இந்நிலையில், டி20 தொடருக்காக குவாஹாட்டியில் இருப்பதால் பொன்னியின் செல்வன் படம் அங்கு எந்தத் திரையரங்கில் தமிழில் திரையிடப்பட்டுள்ளது என்கிற கேள்வியை தனது ட்விட்டரில் எழுப்பினார் அஸ்வின். 

இதற்கு ட்விட்டரில், குவாஹாட்டி சென்ட்ரல் மாலில் உள்ள சினிபொலிஸ் திரையரங்கில் மதியம் ஒரு மணி காட்சியில் பொன்னியின் செல்வன் படம் தமிழில் திரையிடப்படுவதாக ஒரு ரசிகர் பதில் அளித்துள்ளார்.

அதற்கு பத்தி அளித்த அஸ்வின், "அது பயிற்சிக்கான நேரம். இன்னும் அதிகக் காட்சிகளுக்குத் திரையிட்டிருக்கலாம்" என்றுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதற்கு அந்த ரசிகர், "பயிற்சியைக் கைவிடுங்கள். பயிற்சியாளரிடமிருந்து அனுமதி வாங்கித் தருகிறேன்" என்று ரசிகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஸ்வின், மூன்று ஸ்மைலிகளைப் பதிலாக அளித்துள்ளார்.

மேலும், பொன்னியின் செல்வன் நாவலின் கதை மற்றும் அதன் கதாபாத்திரங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து விடியோக்களை வெளியிட்டு வருகிறார் அஸ்வின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player ashwin twitter post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->