சூரியின் கருடன் படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!
Cuddalore Garudan Movie Narikuravarkal
கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகர் சூரி நாயகனாக களம் இறங்கி இருக்கும் இரண்டாவது படம் கருடன். இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவான இந்த கருடன் படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில், இன்று காலை காட்சிக்கு கருடன் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு டிக்கெட் தர திரையரங்கம் நிர்வாகம் மறுத்துள்ளது.
மேலும் திரையரங்கத்திற்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர்கள் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் திரையரங்க நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நரிக்குறவர்களை உள்ளே அனுமதித்தால் திரையரங்கில் உள்ள மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அதிர்ச்சி விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து நரிக்குறவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியர் இடமும் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே போலீசார் மற்றும் கொட்டாச்சியரின் அறிவுறுத்தலின்படி திரையரங்க நிர்வாகம் நரிக்குறவர்களை திரைப்படம் பார்க்க மதிய காட்சிக்கு அனுமதி வழங்கியது.
இருப்பினும் திரையரங்கம் உள்ள பகுதிகள் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையில் இதே போல் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்க விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். தற்போது கடலூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
English Summary
Cuddalore Garudan Movie Narikuravarkal