#BigBreaking | பிரபல நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது! - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே விருது' (Dadasaheb Phalke Award) வழங்கப்படும் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு சினிமாவுக்கான சேவைகளுக்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் நடிகை ஆஷா பரேக். 

1960கள் மற்றும் 1970களில் ஹிந்தி திரைப்பட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக இருந்தவர் ஆஷா பரேக். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆஷா பரேக், 'நசீர் ஹுசைனின் தில் தேகே தேகோ' (1959) திரைப்படம் மோளம் பிரபலமானார்.

ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), 
ஃபிர் வோஹி தில் லயா ஹூன் (1963), தீஸ்ரி மன்சில் (1966) , 
பஹரோன் கே சப்னே (1967), பியார் கா மௌசம் (1969), 
கேரவன் (1971) 
ராஜ் கோஸ்லாவின் தோ படன் (1966), 
சிராக் (1969) 
மெயின் துளசி தேரே அங்கன் கி (1978) 
சக்தி சமந்தாவின் கடி ஆகிய வெற்றி படங்களில் தன் நடிப்பு திறமையால் புகழில் உச்சிக்கே சென்றார் ஆஷா பரேக்.

இந்நிலையில், நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த விருதை நடிகர் ரஜினிகாந்த், ராஜ் கபூர் , யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென், அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா ஆகியோர் பெற்றுள்ளனர். தேவிகா ராணி ஆகியோர் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dadasaheb Phalke Award to be given to veteran actress Asha Parekh this year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->