அதிகரிக்கும் காற்று மாசு - டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுப்பாடு மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. 

ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது. டெல்லியில் உள்ள 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. 

நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கடுமயான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் 1-5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்புகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online class start to school students in delhi for air pollution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->