பட்டா தருவதில் தாமதம் - மேடையிலேயே அமைச்சர் பொன்முடி எடுத்த அதிரடி நடவடிக்கை.!
minister ponmudi action patta issue in vilupuram district
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, காடகனூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடவுபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசிக் கொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தங்களுக்கு பட்டா தருவதில் அதிகாரிகள் தாமதப்படுத்தவதாக புகார் கூறினார்.
இதைக்கேட்ட அமைச்சர் பொன்முடி உடனடியாக அங்கேயே நடவடிக்கையில் இறங்கினார். அதாவது சம்பந்தப்பட்ட கண்டாச்சிபுரம் வட்டாட்சியரை மேடையில் இருந்தபடி அழைத்து, முதல்வர் வரும் போது, இன்னும் 10 நாட்களில் எல்லோருக்கும் பட்டா கொடுக்க போகிறோம். நம் மாவட்டத்தில் புதுசா 10 ஆயிரம் பேருக்கு பட்டா தர உள்ளோம்.
எல்லாம் கரெக்டாக பண்ணி, இந்த தாலுகாவில், தொகுதியில் எங்கேயும் பட்டா இல்லாமல் இருக்கக்கூடாது. உங்களுக்கு எங்கேயாவது இருந்து அது வரணும், இது வரணும் என்று பார்த்திட்டு இருக்கக்கூடாது.
ஒழுங்கா நீங்க தான் சரியான புறம்போக்கு நிலமா இருந்தா, அதில் பட்டா கொடுப்பதற்கான எல்லா வேலையும் செய்யணும். ஏதாவது நின்னுச்சன்னா, அப்புறம் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ, முதல்வர் அதை செஞ்சிருவாரு. இது என் தொகுதி. முன்னடி சொன்ன மாதிரி ரொம்ப பழக்கப்பட்ட ஊரு. நாளைக்கு பிரச்சனையும் இருக்கக்கூடாது. பட்டா கொடுக்கணும்.
என்று அதிகாரியை விரட்டி, நடவடிக்கையை வேகப்படுத்தினார். மேடையில் நின்றபடி, அதிகாரியை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியதைக் கண்டதும், புகார் கூறிய பெண் மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றார்.
English Summary
minister ponmudi action patta issue in vilupuram district