வடச்சென்னை பட நடிகரை டார்ச்சர் செய்த கவுதம் மேனன்.?! வாய்விட்டு கதறிய டேனியல் பாலாஜி.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் காக்க காக்க,  வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக  உயர்த்தியவர்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் விமர்சன ரீதியாக  ரசிகர்களிடமும் திரைப்பட விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் என்பதையும் தாண்டி வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள் கௌதம் மேனன். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவான  விடுதலை திரைப்படம் வருகின்ற 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜீ.வி.எம்.

விக்ரம் நடிப்பில் இவர் இயக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனின் நெருங்கிய நண்பரும்  குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான  டேனியல் பாலாஜி, கௌதமை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர்  கௌதமிற்கு நண்பனாக இருப்பதே மிகவும் கஷ்டமான காரியம் என நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இதைப் பற்றி விரிவாக பேசிய அவர் சில படங்களுக்கு தன்னை அழைத்து ஒன்றிரண்டு காட்சிகளில் நடிக்குமாறு அன்புத் தொல்லை கொடுப்பதாக பகிர்ந்து கொண்டார். தற்போது வெளியாகயிருக்கும் துருவ நட்சத்திரங்கள் திரைப்படத்திலும்  டேனியல் பாலாஜியை ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கு அன்பு தொல்லை கொடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அவரும் தனது நண்பர் தானே என நடித்துக் கொடுத்திருக்கிறாராம். இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daniel balaji speaks about gautham menon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->