தாமதமாகும் புயல்! தப்பிக்குமா தமிழகம்! சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் சொன்ன இரு செய்தி!
Fengal Cyclone Update nov 27
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதில் தாமதமாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்னும் 12 மணி நேரம் கழித்து தான் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, வட தமிழகத்தை நோக்கி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுவையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வருகின்ற 30ஆம் தேதி இந்த புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலெட்டை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. அதற்க்கு பதிலாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Fengal Cyclone Update nov 27