கேப்டன் மில்லர் "first look" எப்போது..? நடிகர் தனுஷ் தந்த அப்டேட்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் புதுப்பேட்டை, வடசென்னை, ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் அருள் மகாதேவன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான் மற்றும் நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேப்டன் மில்லர் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் சர்ச்சை எழுந்து தற்பொழுது ஓய்ந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்பொழுது வெளியாகும் என அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். வரும் ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட் தந்துள்ளார். அந்த பதிவில் "Captain Miller first look ⏳" என பதிவிட்டுள்ளார். அதாவது கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூடிய விரைவில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடிகர் தனுஷின் இந்த ட்விட் பதிவை தனுஷ் ரசிகர்கள் ரீட்விட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush gave an update on Captain Miller movie first look


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->