பொன்னியின் செல்வன் பகுதி 2 குறித்து, மணிரத்னம் சூப்பர் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

சோழர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடல் சமீபத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்த ப்ரோமோஷனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பகுதி 2 இன்னும் 6 முதல் 9 மாதங்களில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director maniratnam about Ponniyin Selvan part 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->