நான் 'தங்க மீன்கள்' என்றால் .. என் மனைவி 'எந்திரன்' - 'வாழை' பட விழாவில் மாரி செல்வராஜ் பேச்சு..!!
Director Mari Selvaraj Talks About His Wife Divya in Vazhai Movie Press Meet
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கியமான இயக்குனராக உருவெடுத்து நிற்பவர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்ப காலங்களில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதையடுத்து 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது 'வாழை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் மனைவி திவ்யா தான் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், "என் காதல் மனைவி திவ்யாவை நான் முதல் முதலில் கூட்டிக் கொண்டு போனதே 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்திற்குத் தான். ஆனால் அதுவும் பாதி படத்திலேயே இயக்குனர் ராம் அழைத்ததால் நான் எழுந்து சென்று விட்டேன்.
ஏதாவது படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் எனக்கு அழைத்து என் மனைவி திவ்யா டிக்கெட் வாங்கித் தர சொல்வார். நான் 'தங்க மீன்கள்' போன்ற படத்தில் வேலை செய்கிறேன். ஆனால் அவரோ 'எந்திரன்' போன்ற படங்களின் டிக்கெட்டை கேட்பார்.
நானும் அவருக்காக வாங்கி கொடுப்பேன். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் கலையை நேசிப்பவர்கள். நானும் 'நாடகக் காதல்' என்று பலரும் கூறி வரும் சாதி மறுப்புத் திருமணம் மூலம் என்னால் ஆனதை செய்துள்ளேன் என்ற நிறைவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான நாள். ஏனென்றால் என் காதல் மனைவி திவ்யாவும் இந்த மேடையில் அமர்ந்து, அவருடைய பெயரில் இந்தப் படம் வெளி வரப் போகிறது" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.
English Summary
Director Mari Selvaraj Talks About His Wife Divya in Vazhai Movie Press Meet