காலநிலை மாற்றம்! தமிழகத்தில் கொளுத்தி எடுக்கப்போகும் வெயில்!
TN Weather report Temperature climate change
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 13 வரை வறண்ட வானிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வெப்பநிலை சாதாரணத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்களை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி: உலக வரலாற்றில் வெப்பமான மாதம்
ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம் (C3S) வெளியிட்ட தகவலின்படி, 2024 உலகின் மிக வெப்பமான ஆண்டாக இருந்த நிலையில், 2025 அதை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிகுறியாக, 2025 ஜனவரி உலக வரலாற்றில் மிக அதிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.
2025 ஜனவரியில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850) இருந்த வெப்பநிலையை விட 1.75°C அதிகமாக இருந்துள்ளது. ஆர்க்டிக் கடல் பனி, சராசரியை விட 6% குறைவாக இருந்தது. "ஜனவரி 2025 விசித்திரமான மாதம்" என C3S துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்தார்.
English Summary
TN Weather report Temperature climate change