CM ஸ்டாலின் நெல்லையில் உல்லாச போட்டோஷூட்! கனிமவள திருட்டு கடையை விசிட் செய்வாரா? இல்லை நமக்கெல்லாம் அல்வா தானா?!
ADMK Arappor Condemn to CM Stalin Nellai Visit
நெல்லைக்கு இருநாள் பயணமாக வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை நேற்று தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டம் உள்பட 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் 20 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக நேற்று நெல்லையில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா கடைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு அல்வா வாங்கி ருசித்து மகிழ்ந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி இருட்டு கடையை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி கனிமவள திருட்டு கடையை விசிட் செய்வாரா? என்று அறப்போர் இயக்கம் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக பொறுப்பாளர் கிரிகாம் பெல்லின் SAV குவாரி செய்யும் கனிமவள திருட்டு வேலையை விசிட் செய்வாரா? அல்லது நமகெல்லாம் இருட்டுக்கடை அல்வா தானா? என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், அதிமுக தரப்பிலும் முதல்வரின் இருட்டுக்கடை விசிட் குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளானதுடன், ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குமுறல் கேட்கவே நெஞ்சைப் பதைக்கிறது.. நெல்லையில் அல்வா சாப்பிட்டு உல்லாச போட்டோஷூட் பயணத்தில் இருக்கும் நீரோ மன்னன் தான் நடத்தும் ஆட்சியின் லட்சணத்திற்கு வெட்கப்பட வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Arappor Condemn to CM Stalin Nellai Visit